Thursday, April 12, 2007

காதலின் ஆழம் ..

நீ என்னுடன் இருந்த நாட்கள் -
இரவின் அழகை உணர்ந்தேன் ,
நிலவில் உன் முகம் கண்டேன் ..
ஒவ்வொரு விஷயமும் புதிதாய் தெரிந்தது ,
மரம் , செடி, கொடி ,
குழந்தையின் சிரிப்பு,கவிதை ,வானவில்,
மழை, வெயில், பனி ...

நீ என்னை விட்டு பிரிந்த பின் -
உயிர் உள்ள பிணம்.......

உன்னை
கடிவதா?
மறப்பதா?
இரண்டுமே முடியவில்லை என்னால்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது!!!

நான் நூறு வருடம் வாழ வேண்டும் ,
என் கடைசி மூச்சு ,
உன் மடியில்
"நான் உன்னை கதலிக்கிறேன்"
என்று சொல்லி பிரிய வேண்டும்

No comments: