Friday, March 16, 2007

காதலின் காதலி..

உன்னுள் உறைய வேண்டும்
என்னை ஏன் வெளியேற்றினாய் என்று
கண்ணீரும் அழும் !!!

என்ன தவம் செய்தேன்
உன் நாசியில் நுழைந்து நுழைந்து
வெளி வருகிறேன் என்று
காற்று மகிழும் !!

நான் தமிழ் மொழி சொல்லாக
மாற விரும்புகிறேன் என்று
வெற்று மொழி சொற்க்கள் இறைவனை வேண்டும்
உன் இதழ்களில் பிறக்க !!!


உன் கையால் இறப்பதை
பாக்கியமாக எண்ணி தான்
வெட்ட வெட்ட மறுமுறை
வளர்கிறதோ நகம் !!!

தொலைக்காட்சி,கணினி எல்லாம் எதற்கு??
உன் விழி போதும்..
அதன் நடனத்தைக் காண
இரண்டு கண்கள் போதாது..

உன்னைப் பற்றி
கவி எழுதிட
நினைத்தால்
கவிக்கும் கவி மறக்கும்......

Wednesday, March 7, 2007

நீ !!!
இது - பார்க்க,படிக்க,எழுத எளிது
ஆனால் அவ்வார்த்தை தரும் பொருளை எழுதினால்
உலகில் காகித தட்டுப்பாடு வந்துவிடும்..

உன்னைப் பார்த்த முதல் நாள்
ஆ !! ஒரு நல்ல மனிதனை பார்த்து விட்டோம் என்று நினைத்தேன்..

நீ என்னை காதலிக்கிறாய் என்று சொன்ன தினம்
உயிர் அற்ற என் உடம்பில் உயிர் பாய்வதை உணர்ந்தேன்..

உன் முதல் முத்தம்
என்னுள் இன்னும் ஆசைகள் புதையுன்டு இருப்பதை உணர்ந்தேன்..

பல மடங்காக திருப்பி அளிக்க எண்ணினேன்
ஆனால் பெண்களுக்கே உரித்தான நாணம் என்னை ஆட்கொண்டது..

என் வாழ்வில் ஒளியே இல்லை என்று நினைத்த தருணத்தில்
நீ பல வண்ணங்களைக் காட்டினாய்..

உயிர்,ஆசை,வண்ணம் இவை அனைத்தும் நீ என்ற உன்னுடன் சேர்ந்து
நாம் ஆகும் நாளிற்க்காக ஆவலுடன் காதிருக்கிறேன்..
.