Wednesday, October 20, 2010

ஒன்று ஏழாக வேண்டும்
ஆண்டுகள் அல்ல ஜென்மங்கள்
என் சுவாசத்திற்கு நறுமணம் சேர்த்து
என் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்த்த
உன்னை -
எதை கொண்டு அபிஷிப்பது
என் முத்தங்களால் தவிர !
எதை கொண்டு அலங்கரிப்பது
என் உடலால் தவிர !
எதை காணிக்கை ஆக்குவது
உன்னுள் உறைவது தவிர !

Thursday, August 26, 2010

உன்னில் ஒரு பாகமாய்
உறைய நினைத்தேன்
என்னில் ஒரு பாகம்
இல்லை
என்பதை மறந்து.

Thursday, October 22, 2009

அழகிய நிலவு
குளிரவைக்கும் காற்று
மெத்தையில் நான்
மனதில் என்னவனின் நினைவு
உண்டிருப்பரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
தூங்கி இருப்பாரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நாளை பார்ப்பேனா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நான் உறங்கிய பின்னும் என்னுடன் பேசி கொண்டு இருந்தது -
செவுத்துகோழி...
வானொலி,
தொலைபேசி,
தொலைக்காட்சி,
இணையதளம்,
உற்றார் உறவினர்,
நண்பர்கள்
இவை அனைத்தும் இல்லாமல்
வாழ்ந்து விடலாம் -
நீ
தொடு தொலைவில் இருந்தால் !!!

Sunday, February 15, 2009

தேனீக்களின் படையெடுப்பு என் வீட்டில்
குடும்பத்தினர் மிரள என்னுள் ஒரு குறும் புன்னகை - ஆம்
நான் எழுதி கொண்டு இருந்தது உனை பற்றிய கவி !!!

Friday, July 4, 2008

உன்னுடன் இருக்கும்போது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்
நீ என்னுடன் சண்டை இட்ட போது உண்மையான துக்கத்தை உணர்ந்தேன்
நீ என்னை ஊக்கப்படுத்திய போது தான் உண்மையான
எழுச்சியை உணர்ந்தேன் - ஆனால்
நீ என்னுள் தான் இருக்கிறாய் என்பதை உன் பிரிவில் தான் உணர்ந்தேன்
....



Monday, September 17, 2007

புன்னகையும் கண்ணீர் சிந்தும் -
உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!

காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!

மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!

இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!