Wednesday, December 13, 2006

பத்து மாதம் என்னை வயிற்றில் சுமன்த தாய்
கல்வி கொடுத்த தந்தை
என்னை செல்லமாக சீண்டி என் தேவைகளை பூர்த்தி செய்யும் உடன் பிறப்பு
என் வாழ்வை பங்கு போடும் என் துணை
இவ்வளவு நெருங்கிய சொந்தங்கள் இருந்தும் ஒரு துன்பம் வரும்போது
நான் எதிர் பார்கும் பேச நிணைக்கும் உறவு - என் நண்பன்
தவம் செய்தால் தான் வரம் கிடைக்கும்
நான் என்ன தவம் செய்தேன் நீ என் நண்பனாக கிடைக்க !!!

கசப்பை உண்டு கொன்டிருந்தேன் ஆனால் அது இனித்தது - காரனம் ??
நான் உச்சறித்து கொன்டிருந்த வார்த்தை - ஆது
உன் பெயர் !!!

Tuesday, December 12, 2006

மரணத்தை விட கொடியது தனிமை -
என்னை நினைக்காத உன் இதயத்தில் தனிமையில் வாடுகிறேன் நான் -
என்னை விடுதலை செய் உன் இதயம் என்னும் சிறையில் இருந்து.....
நான் காதலிக்கும் முன்பு நீ வெள்ளை ரோஜா
நான் உன்னை காதலிக்க தொடங்கிய பின்பு சிவப்பு ரோஜா - காரனம்?
நீ இருப்பதோ என் இதய பெட்டகத்தில் !!!

செல் ஃபோன் கவிதை

என் விழி என்னும் கேமரா'வில் உன்னை பதிவு செய்தேன்
உனது குரலை என் வாய்ஸ் ரெகார்ட'ரில் பதிவு செய்து கொண்டேன்
ஒரு புறாவாக உனது செய்திகளை உனது நண்பர்களுக்கு எஸ்-எம்-எஸ் செய்தேன்
நான் வேலையாய் இருந்த தருணங்களில் உனக்கு வரும் அழைபுக்களை என் வாய்ஸ் மெய்லில் பதிவு செய்தேன்
இவ்வளவு செய்தும் 2 மெகா பிக்ஸ்ல் இல்லை என்று என்னை துக்கி எறிந்து விட்டாய்....
நீ வானம் நான் நிலவு
நீ மழை நான் வானவில்
நீ வண்டு நான் பூ
நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பவர்கள்
நாம் நெடுநாள் பிறிந்து இருபது கடினம்
விரைவில் சேர்வோம்...
என் கண்ணின் பார்வை நீ
என் இதழ்களின் புன்னகை நீ
என் இதயத்தின் துடிப்பு நீ
என் உடலின் உயிர் நீ
இன்னும் நீ என்னுடன் தான் இருக்கிறாய்
என் பார்வயில் ,
என் புன்னகையில்,
என் இதயத்துடிப்பில்,
என் உயிரில்
என் காதலுகு மரணம் இல்லை
என் உயிர் இருகும் வரை.....
காதல் தோல்வி காயம் போன்றது

ஆறிய பின்னும் தழும்புகளாய் வாழும்....
கடலில் மூழ்கி விட்டேன்
வாழ்வின் விளிம்பில் இருந்த என்னை
அந்த கடல் தான் காப்பாற்றியது -
நான் மூழ்கியது என் நண்பனின்
அன்பு என்ற கடலில்.......
உன்னை பார்த்த முதல் நாள் என் இதயத்தில் இருக்கிறது
நாம் ஒன்றாக சேர்ந்து சிரித்த தருணங்கள் என் இதயத்தில் இருக்கிறது
நாம் போட்ட சண்டைகள் என் இதயத்தில் இருக்கிறது
நாம் கழித்த இனிமையான நாட்கள் என் இதயத்தில் இருக்கிறது
நீ என்னை விட்டு சென்ற நாளும் என் இதயத்தில் இருக்கிறது - நான் உன் நினைவுகளுடன் வாழவாவது ஆசை படுகிறேன்
என் இதயத்தை என்னிடம் தந்து விட்டு போ...
கவிதையை வர்ணித்தே கவிதை எழுத முடியும??
ஏன் முடியாது -
நான் எழுதவில்லையா உன்னை வர்ணித்து!!!


என் முதல் கவிதை

மின்னல் கண்ணை பரிக்கும் மனதை பறிக்குமா ??

பறித்ததே உன் புன்னகை !!!